Categories
தேசிய செய்திகள்

பீகாரில் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க…. என்ன பண்றாங்கண்ணு நீங்களே பாருங்க…..!!!!!

பீகார் மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து, பாட்னா பல்கலைக்கழக வளாகம் துவங்கி கட் நதிக்கரையோரம் வரை அமர்ந்து அரசுத் தேர்வுக்குப் படிக்கத் தொடங்கியுள்ளனர். பிகார் மாநிலத்தில் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கையில் பேனா மற்றும் புத்தகத்துடன் அமர்ந்து அரசுத் தேர்வுகளுக்காக படிக்கும் அந்த புகைப்படங்களை ஏஎன்ஐ வெளியிட்டுள்ளது.

ரயில்வே, மாநில அரசுப் பணி தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வுகளுக்கும் இந்த மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இங்கே ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மாணவர்களுக்கு இலவசமாக எழுத்துத்தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை ஒவ்வொரு வாரமும் சுமார் 12 ஆயிரம் முதல் 14 பேர் எழுதுகிறார்கள். பொறியியல் பட்டதாரி முதல் பல்வேறு உயர்கல்வி பயின்ற இளைஞர்களும் தன்னார்வத்தோடு பங்கேற்று இங்கே கல்வி புகட்டி வருகிறார்கள்.

சுமார் 30 -35 பேர் குழுவாகச் சேர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். நாட்டில் சென்ற மார்ச் மாதத்தில் வேலை இல்லாமல் உள்ள இளைஞர்களின் விகிதம் 7.60 சதவீதம் ஆகும். பீகார் மாநிலத்தின் வேலை இல்லாத இளைஞர்களின் விகிதம் 14.4 சதவீதமாகும். நாட்டின் சராசரியை விட பீகாரில் 2 மடங்கு அதிகமாக இருக்கிறது. கடந்த 2021ஆம் வருடம் டிசம்பரில் இது 16 சதவீதமாக இருந்து, பின் 2022 ஜனவரியில் 13.3 சதவீதமாகக் குறைந்து, பிப்ரவரியில் 14 அக உயரத்தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |