Categories
மாநில செய்திகள்

“பீகாரை ஆளும் பாஜக கூட்டணியை விமர்சித்த பாஜக எம்.எல்.ஏ”… பீகாரில் பரபரப்பு…!!!

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியை அம்மாநில பாஜக எம்எல்ஏ ஒருவர் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

பீகாரில் நிதிஷ்குமார் கட்சியுடன் கூட்டணியில் உள்ள பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை அம்மாநிலத்தின் பாஜக எம்.எல்.ஏ ஹரிபூஷன் தாக்கூர் பச்சோல் கடுமையாக விமர்சித்திருக்கிறார். செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறியுள்ளதாவது, “ஒரு ஊழல் வழக்கில் முசாபர்பூர் காவல் கண்காணிப்பாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளித்திருந்தேன்.

ஆனால் அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அந்த அதிகாரி சட்டம் மற்றும் ஒழுங்கு நுணுக்கங்களை எனக்கு விளக்கத் தொடங்கினார். நான் இந்த கட்சியை சேர்ந்தவன் இருப்பினும், என் கருத்துக்களை தெரிவிக்க எனக்கு உரிமை இருக்கின்றது. நிர்வாகத்தில் ஆழமான ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றேன். எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்காவிடில் கடும் விளைவுகளை சந்திக்க நேரும்” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |