பீகாரில் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடந்து முடிந்துள்ள நிலையில், 53.51 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியுடன் நிதீஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், அம்மாநிலத்தின் சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த 28ஆம் தேதி நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றுள்ளது.மொத்தம் 17 மாவட்டங்களில் உள்ள 94 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடந்தது.
தேர்தல் நடத்தப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பின்பற்றி மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். இரண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தலில் 53.51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.