Categories
தேசிய செய்திகள்

பீகார்: “ஒரே மாதத்தில் 2 தாக்குதல் சம்பவங்கள்”… முதலமைச்சருக்கு மேலும் பாதுகாப்பு…..!!!!!

ஒரே மாதத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக 2 தாக்குதல் சம்பவங்கள் நடந்ததைத் அடுத்து பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஒவ்வொரு மாநில முதலமைச்சருக்கும் பாதுகாப்பு வழங்க தேசிய பாதுகாப்பு படையால் சிறப்பு பயிற்சி பெற்ற எஸ்எஸ்ஜி எனப்படும் மாநில பாதுகாப்பு படையினர் பணிபுரிந்து வருகின்றனர். அதாவது முதலமைச்சரின் பயணம் முதல் அவர் தங்கும் இடம் வரையிலும் அனைத்து பகுதிகளிலும் அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநிலப் பாதுகாப்பு படை உறுதிசெய்கிறது. இந்த நிலையில் சென்ற ஏப்ரல் 12 ஆம் தேதி நாளந்தா மாவட்டத்தில் பிகார் முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர் வெடிகுண்டு வீசிய சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவ்வாறு முதலமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் நடைபெற்ற இந்த அசம்பாவித சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இச்சம்பவத்திற்கு பின் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் முதலமைச்சரின் பாதுகாப்பினை வலுப்படுத்த பாதுகாப்புபணியில் மேலும் 50 காவலர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் 3 காவல் ஆய்வாளர்கள், 11 துணைகாவல் ஆய்வாளர்கள், 20 உதவி துணைகாவல் ஆய்வாளர்கள் மற்றும் 18 காவலர்கள் இடம்பெற்றுள்ளனர். அத்துடன் முதலமைச்சர் நிகழ்ச்சிகளில் பல்வேறு அடுக்கு பாதுகாப்பு வழிமுறைகளை செயல்படுத்த இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்பாக சென்ற சில நாட்களுக்கு முன்பு பாட்னா மாவட்டதில் உள்ள பக்தியார்பூரில் நடந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதலமைச்சர் நிதிஷ்குமார் மீதுவாலிபர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்ட விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |