Categories
தேசிய செய்திகள்

பீகார் சட்டசபை தேர்தல்… மக்கள் புதிய சாதனை… பிரதமர் மோடி வலியுறுத்தல்…!!!

பீகாரில் நடந்து கொண்டிருக்கும் இறுதிகட்ட சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. அதன் முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 28ம் தேதி முடிவடைந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த மூன்றாம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில் மூன்றாவது கட்ட இறுதி தேர்தல் வாக்குப்பதிவு இன்று பீகாரில் தொடங்கியுள்ளது. வடகிழக்கு பீகாரில் 19 மாவட்டங்கள் உள்ளடங்கிய 78 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றி வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து கொண்டிருக்கிறார்கள். இறுதிக்கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு பீகாரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வருகின்ற பத்தாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் மூன்றாம் கட்ட சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யும்படி பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இன்று நடந்து கொண்டிருக்கும் ஜனநாயக திருவிழாவில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்ற புதிய வாக்களிப்பு சாதனையை படைக்க வேண்டும் என அனைத்து வாக்காளர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இருந்தாலும் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது மிகவும் அவசியம்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |