பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் எழுப்பிய குற்றச்சாட்டிற்கு, யாருடைய நிர்பந்தத்திற்கும் அடிபணிய மாட்டோம் என்று தேர்தல் ஆணையம் பதிலடி கொடுத்துள்ளது.
பீகாரின் சட்டமன்ற தேர்தலில் 119 இடங்களில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால் வெற்றி சான்றிதழ் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது என ராஷ்டிரிய ஜனதாதளம் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுத்த தேர்தல் ஆணையம், எவருடைய நிர்பந்தத்திற்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம்.
அதுமட்டுமன்றி முடிவுகளை அறிவிப்பதற்கு முன்னர் தபால் வாக்குகளை மீண்டும் சரிபார்த்து செல்லாத வாக்குகள் இருந்தால் அவை நிராகரிக்கப்பட்ட பின்னரே முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.