Categories
தேசிய செய்திகள்

பீகார் நீதிமன்றம் அதிரடி… ”1இல்ல… 2இல்ல… 9பேருக்கு”ஒரே வழக்கில் தூக்கு…! வரலாற்றில் இதுவே முதல்முறை…!!

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பீகார் மாநிலத்தின் கோபால்கஞ்சியில் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்ததால் 19 பேர் உயிரிழந்துள்ளனர், ஆறு பேர் கண் பார்வை இழந்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு உள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

இந்த வழக்கின் விசாரணையின் போதே குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் நான்கு பெண்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து சுமார் நான்கரை வருடத்திற்கு பிறகு இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுவரையில் இப்படி ஒரு தண்டனையை பீகார் அரசு வழங்கியதே இல்லை. ஒரு வழக்கில் 9 பேருக்கு தண்டனை விதித்தது இது இவே முதன் முறையாகும்.

Categories

Tech |