முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் மாநில அமைச்சரவையில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜ் பிரதாப் யாதவ் உள்ளிட்ட 31 பேர் அமைச்சராக பதவி ஏற்றனர்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி சார்பில் 16 அமைச்சர்கள், ஐக்கிய ஜனதா தளம் சார்பாக 11 அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சி சார்பில் இரண்டு அமைச்சர்கள் உட்பட 31 பேர் பதவி ஏற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இடதுசாரி கட்சிகளும் இந்த அரசுக்கு ஆதரவளித்தாலும் இடது சாரியை கட்சியைச் சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் பங்கேற்கவில்லை.. ஆகவே நிதிஷ்குமார் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசின் அமைச்சரவை பதவி ஏற்பு இன்று நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து எந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்த இலாகா ஒதுக்க வேண்டும் என்பது தொடர்பான நடவடிக்கைகளை இரண்டு கட்சிகளும் சேர்ந்து எடுக்க இருக்கின்றன.
நிதீஷ் குமார், தேஜஸ்வி யாதவ் இருவரும் முதல் கட்டமாக பதவியேற்று இருந்தார்கள்.. அதை தொடர்ந்து அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. அமைச்சர்களுக்கு ஆளுநர் பகு சௌகான் பதவி பிரமாணம் செய்கிறார். முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகனான தேஜ் பிரதாப் யாதவ் மீண்டும் அமைச்சராக பதவி ஏற்கிறார். இவர் தேஜஸ்வி யாதவ்வின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.