பிகார் மாநிலம், நாலந்தாவில் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்ற ஜன்சபா நிகழ்ச்சியில் மேடைக்கு அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குண்டு வீசினார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அதிர்ஷ்டவசமாக இதில் எந்த அசம்பாதவிமும் ஏற்படவில்லை. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசர், நிதிஷ்குமாரை பத்திரமாக அழைத்துச்சென்றனர். தொடர்ந்து குண்டு வீசிய நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
அந்த நபர் மனநலம் குன்றியவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில், பொது நிகழ்ச்சி ஒன்றில் நிதிஷ்குமாரை ஒருவர் தாக்கிய நிலையில், தற்போது அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.