Categories
மாநில செய்திகள்

“பீடிஆருக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர்” கூடவே அந்த ரெண்டு விஷயத்தையும் கேட்கணுமா…..? தொண்டர்கள் கோரிக்கை…..!!!!!

தமிழகத்தில் நிதித்துறை அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருக்கிறார். இவர் எப்போதும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று பேசுவார். இதனால் திமுக தொண்டர்கள் மத்தியில் பீடிஆருக்கு செல்வாக்கு பெருகி வருகிறது. அதோடு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு போன்றவைகளுக்கு செம டஃப் கொடுக்கிறார். இவருக்கு நிர்வாக ரீதியாகவும் அதிகாரிகள் மத்தியில் நல்ல பெயர் தான் இருக்கிறது. இந்த நல்ல பெயர்களால் அமைச்சருக்கு செல்வாக்கு பெருகினாலும், ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலினை முந்த நினைக்கிறார் என்று மேலிடத்தில் சில நிர்வாகிகள் பீடிஆரை போட்டுக் கொடுப்பதாகவும் தகவல்கள் பரவுகிறது.

இதனால் முதலமைச்சருக்கும் நிதி அமைச்சருக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாக ஒரு தகவல் அவ்வப்போது உலா வந்து கொண்டிருக்கிறது. அதாவது திமுக ஐடி விங்கில் இருந்து நிதி அமைச்சரை நீக்கியதில் இருந்து, டாக்டர் சரவணன் நிதியமைச்சரை சந்தித்து திமுகவில் சேர விருப்பம் தெரிவித்தும், இதுவரை திமுக தலைமை கிரீன் சிக்னல் கொடுக்காமல் இருப்பது வரை பல நிகழ்வுகளால் முதல்வருக்கும் நிதியமைச்சருக்கும் இடையே பனிப்போர் நிலவுகிறது என்ற தகவல் உண்மை தானோ என்ற சந்தேகம் நிலவுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மதுரை மாவட்டத்தில் உள்ள மாட்டுத்தாவணியில் 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இரண்டு கட்டிடங்களாக டைடல் பார்க் அமையும் என்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நிதி அமைச்சர் தான் ஆட்சியில் இருக்கும் போது தென் மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கிக் கொடுத்து தன்னுடைய சொந்த மாவட்டத்துக்காக உருப்படியாக ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார். அதோடு சமீபத்தில் நிதி அமைச்சர் கூடிய விரைவில் தென் மாவட்ட இளைஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வரும் என்று கூறியிருந்தார். அவர் கூறியபடியே மதுரை மாவட்டத்தில் டைடல் பார்க் வரும் என்ற நல்ல செய்தியை தமிழக முதல்வர் அறிவித்து விட்டார். இந்த அறிவிப்பின் மூலம் முதல்வருக்கும் நிதியமைச்சருக்கும் இடையே எவ்வித பிரச்சனையும் இல்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

இந்த டைடல் பார்க்குடன் சேர்த்து நிதி அமைச்சர் இன்னும் 2 விஷயங்களை கூட முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி தர வேண்டும் என்று விரும்புகிறாராம். அதாவது தமிழக உளவுத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாவுடன் நட்பு பாராட்டி வரும் அண்ணாமலை சமீப காலமாகவே நிதியமைச்சரை கடுமையாக விமர்சனம் செய்கிறார். இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதன் பிறகு நிதிநிலையை சீர் செய்யும் நோக்கத்துடன் தமிழகத்தில் சிறப்பு நிதி செயலகம் ஒன்றை கொண்டுவர வேண்டும் என நிதியமைச்சர் விரும்புகிறார்.

இதற்கான ஆலோசனையை முதல்வருடன் நடத்துவதற்காக நாடாளுமன்ற செயலகத்தின் மூத்த  இயக்குனர் எம்எல்கே ராஜாவை தமிழகத்திற்கு அழைத்து வந்தார். ஆனால் முதல்வரை நேரில் சந்தித்து பேசியும் திட்டம் செயல்படுத்தாமல் இருப்பதால் ராஜா அப்செட் ஆகி மீண்டும் மத்திய அரசு பணிக்கு சென்று விட்டார். இதனால் நிதியமைச்சர் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார். எனவே நிதியமைச்சரின் விருப்பமான சிறப்பு நிதி செயலகம் என்ற திட்டத்தையும் தொடங்கு வதற்கு முதல்வர் ஸ்டாலின் கிரீன் சிக்னல் காட்ட வேண்டும் என திமுக தொண்டர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |