உணவுப் பொருளான பீட்சாவுடன் இந்த வியாழன் கோளின் வடக்குப் பகுதியை ஒப்பிட்டு, நாசா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.
விஞ்ஞானிகள் கோள்களைப் பற்றிய ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் வியாழன் கோள் பற்றி பல்வேறு ஆய்வுகளை நாசா மேற்கொண்டு வருகிறது. சூரியனிலிருந்து ஐந்தாவது கோள் வியாழன் ஆகும். இது சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோள் ஆகும்.மேலும் இது சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கோள்களை போல் இல்லாமல் வளையங்களை கொண்டது.
இந்நிலையில் வியாழன் கோளின் வடக்குப் பகுதியை வெப்பத்தை கொண்டு அளவிடும் முறையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் பீட்சாவை போன்று வியாழன் கோளின் மேல் பகுதி இருப்பதாக நாசா குறிப்பிட்டு உள்ளது. இதை அடுத்து வியாழன் கோளின் சிவப்பு நிறத்தில் உள்ள பகுதிகள் கோளின் மேற்பகுதி எனவும், அதிக மஞ்சள் நிறத்தில் உள்ள பகுதிகள் ஆழமான பகுதிகள் என நாசா சுட்டிக்காட்டியுள்ளது.