பிரிட்டனில் கத்தியால் தாக்கப்பட்டு உயிழந்த சிறுவன் குறித்த புகைப்படம் மற்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் canning என்ற நகரில் உள்ள Zzetta Pizzas என்ற கடைக்கு வெளியில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் 14 வயதுடைய ஒரு சிறுவன் கத்தியால் தாக்கப்பட்டார். அதன்பின்பு தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து சிறுவனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது சிறுவன் குறித்த விபரம் மற்றும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அந்த சிறுவனின் பெயர் Fares. இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளதாவது, அந்த சிறுவன் பள்ளி சீருடையில் இருந்தார். அந்த சம்பவம் எனக்கு வருத்தத்தை உண்டாக்கியது.
எனினும் சிறுவன் சிகிச்சைக்கு பின் உயிர் பிழைப்பார் என்று நம்பியிருந்தேன். அதனால் தான் விரைவாக அவசர உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டேன் என்று கூறியுள்ளார். மேலும் இச்சம்பவத்தில் தற்போது வரை எவரும் கைதாகவில்லை. எனவே தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.