இயக்குனர் காந்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த பீட்சா திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றதையடுத்து நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் பீட்சா 2 திரைப்படம் வெளியானது. இந்த சூழலில் நடிகர் அஸ்வின் தயாரிப்பில் பீட்சா 3 உருவாகி வருகிறது. கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் காளி வெங்கட், பவித்ரா போன்றோர் நடிக்கின்றனர். மேலும் இந்த திரைப்படமானது நவம்பர் மாதம் திரைக்கு வர இருப்பதாக படக்குழுவினர் புதன்கிழமை அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளனர்.
Categories