பீட்ரூட் பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்:
பீட்ரூட் – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பீட்ரூட்டின் உள்ள தோலை மெல்லியதாக நீக்கி விட்டு, நன்கு துருவி கொள்ளவும். பின்பு பெரிய வெங்காயம், கொத்தமல்லி தழை, இஞ்சி, பூண்டுகளின் தோல் நீக்கியபின், அவற்றை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். மேலும் மிக்சிஜாரில் நறுக்கிய இஞ்சி, பூண்டை போட்டு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
பிறகு மற்றோரு பாத்திரத்தில் அரிசி மாவு, சோள மாவு, கடலை மாவு, மிளகாய் தூள், நறுக்கிய பெரிய வெங்காயம், உப்பு, அரைத்த இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு,சிறிதளவு தண்ணீர் ஊற்றி, நன்கு மெண்மையாக,கெட்டியாக பக்கோடா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
அதன் பின்னர் அடுப்பில் கடாயை வைத்து, அதில் பொரிக்க தேவைகேற்ப எண்ணெய் ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து கொள்ளவும். இறுதியில் பிசைந்த மாவு கலவையை, சிறிது சிறிதாக மாவுகளை எடுத்து, கொதிக்கின்ற எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வரும் வரை நன்கு வெந்ததும்,பொரித்து எடுத்து பரிமாறினால் ருசியான பீட்ரூட் பக்கோடா ரெடி.