மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் ஊரடங்கு அமல் படுத்தி உள்ளதாக மாவட்ட ஆட்சியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அம்மாநிலம் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்படி வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை ஊரடங்கு போடப்பட்டுள்ளதாகவும், இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் மற்றும் மருந்தகங்கள் செயல்படும் என்றும் ஆனால் உணவகங்கள், திருமண மண்டபங்கள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவை இக்காலகட்டத்தில் செயல்படாது என்றும் பீட் மாவட்ட ஆட்சியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.