பீமா கோரேகான் வன்முறை தொடர்பான வழக்கில் கௌதம் நவ்லேகாவை என்ஏஐ கைது செய்து மும்பை தாலோஜா சிறையில் அடைத்துள்ளது. இதற்கு முன்பாக வயது மூப்ப காரணமாக பலத்த பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் அவரை வீட்டு காலில் வைக்க அனுமதி அளித்து கடந்த 10 ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தேசிய பாதுகாப்பு, ஒருங்கிணைப்புக்கு அச்சுறுத்தல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நவ்லேகாவுக்கு கரிசனம் காட்டக்கூடாது என்று அவரது வீட்டு காவல் அனுமதி ரத்து செய்ய வேண்டும் என்றும் தேசிய புலனாய் முகமை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி கே.எம். ஜோசப், ஹிரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, என்.ஐ.ஏ. சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜுவுக்கும் நீதிபதிகளுக்கும் இடையே கடும் விவாதம் நடைபெற்றது. அதாவது, எங்களது உத்தரவு சில ஒட்டைகளை கண்டறிந்து செயல்படுத்தாமல் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். 70 வயது முதியவரை வீட்டுக் காவலில் வைத்து மாநில காவல்துறை கண்காணிக்க முடியாது என்பதை கூறவா மத்திய அரசின் சொலிசிட்டர் துஷார் மேத்தா, கூடுதல் சொலிட்டர் ஜெனரல் ஆகியோர் ஆஜராகி உள்ளனர். அவரை விட மிக கொடூர குற்றவாளிகளும் உள்ளனர். தேவைப்பட்டால் அவரது வீட்டு காவலின் பின்புற கதவு சீல் வைத்து, சிசிடிவி கேமராக்களை அதிகரிக்கவும், சிறையிடவும் அதிக பாதுகாப்பு அளிக்கவும், அவரை 24 மணி நேரத்தில் சிறையில் இருந்து வெளியேற்றி வீட்டு காவலில் வைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.