உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக பீர் மதுபானத்தின் விலை உயரக்கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அதிகாலையில் தொடங்கியது. இந்த படையெடுப்பில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் தொடர்ந்து 5-வது நாளாக இந்த போர் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து தலைநகர் கீவை ரஷ்ய வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும், ரஷ்ய வீரர்கள் நுழைந்து தாக்குதலை நடத்தி வருகின்றன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பெருமளவு உயிர்சேதமும் மற்றும் பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பீர் மதுபானத்தின் விலை உயரக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில் உலக அளவில் பார்லி உற்பத்தியில் ரஷ்யா 2-ஆம் இடத்திலும், மால்ட் உற்பத்தியில் உக்ரைன் 4-ஆம் இடத்திலும் உள்ளனர். இந்நிலையில் பார்லி தானியத்தில் இருந்து பீர் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே இந்த போரின் காரணமாக ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் நீடிக்கும் நிலையில், பார்லியின் விலை அதிகரிக்க கூடும். இதனால் பீர் மதுபானத்தின் விலையும் அதிகரிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.