பீஸ்ட் திரைப்படத்திற்காக நெல்சன் பல சுவாரசியமான சர்ப்ரைஸ்களை வைத்திருக்கிறாராம்.
விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். படத்தின் அப்டேட்டுகள் அவ்வபோது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் இருந்து வெளியாகிய இரண்டு பாடல்களும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து முணுமுணுக்க செய்து வருகின்றது. பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்ததால் ரசிகர்கள் கவலை அடைந்த நிலையில் பீஸ்ட் படத்திலிருந்து ட்ரெய்லர் வெளியாகியதால் ரசிகர்கள் சந்தோஷம் அடைந்தனர்.
டீசர் பல நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ட்ரெய்லர் மூன்று நிமிடங்கள் ஓடுகின்றன. இதில் நெல்சன் ஒருவரி கதையை கூறியிருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். நெல்சன் தனது படங்களின் டிரைலரில் ஒரு வரி கதையை கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளதால் தான் இதிலும் ஒரு வரி கதையை கூறியுள்ளார். நெல்சன் ட்ரெய்லரில் ஒரு ஒரு வரி கதையை கூறிவிட்டு படத்தில் பல டுவிஸ்டுகளை காட்டுவதுதான் இவரின் ஸ்டைலாம். இதனால் பீஸ்ட் படத்தில் பல சர்ப்ரைஸ்கள் இருப்பதாக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.