பீஸ்ட் படத்தின் அடுத்த போஸ்டரை பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளன்று வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் தற்பொழுது பீஸ்ட் திரைப்படத்தில் நடிக்கும் நிலையில் இவருக்கு கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் செல்வராகவன், யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.
விஜய் பிறந்தநாளன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ரசிகர்கள் அடுத்த அப்டேட் கேட்டு வருகிறார்கள். இந்நிலையில், இந்த படத்தின் அடுத்த போஸ்டரை பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளான அக்டோபர் 13ஆம் தேதியில் படக்குழு வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.