‘பீஸ்ட்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த நெல்சன் இந்த படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை இயக்குனர் நெல்சன் நேற்று டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் விஜய், நெல்சன், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் இடம் பெற்றிருந்தனர்.
The band’s back together for our final act…and it’s gonna be an entertaining one 😉 #micdrop #Beast #funonsets @actorvijay @Nelsondilpkumar @sunpictures @manojdft pic.twitter.com/u7gzJcN8Ul
— Pooja Hegde (@hegdepooja) November 28, 2021
இந்நிலையில் அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த பூஜா ஹெக்டே, ‘இறுதிகட்ட படப்பிடிப்புக்காக எங்கள் இசைக்குழு மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது. இது மிகவும் பொழுதுபோக்கான ஒன்றாக இருக்கும்’ என பதிவிட்டுள்ளார். இதிலிருந்து பீஸ்ட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பது தெரியவந்துள்ளது. இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் படப்பிடிப்பு இன்னும் முடியாததால் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.