விஜய் படத்தின் கதையை அமெரிக்க திரையரங்கம் கசியவிட்டு இருக்கின்றது.
பிரபல இயக்குனரான நெல்சன் திலீப்குமார் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வருகின்றார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் அடுத்த வாரம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தை அமெரிக்காவில் வருகின்ற 12ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் கதையை அமெரிக்காவின் கேலக்ஸி தியேட்டர் லீக் செய்துள்ளது.
தீவிரவாத அமைப்பின் தலைவரை விடுவிக்கக் கோரி, நகரின் பரபரப்பான பகுதியை சர்வதேச தீவிரவாதிகள் கைப்பற்றி தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அங்குள்ள மக்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் தீவிரவாதிகளிடம் அரசு குழு பேச்சு வார்த்தை நடத்துகின்றது.
அரசு குழுவின் தலைவருக்கு முன்னாள்ரா-ஏஜென்ட் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்திலிருப்பது தெரிய வருகின்றது. தீவிரவாதிகளிடமிருந்து பிணைக் கைதிகளை மீட்பதற்காக அவரிடம் அரசு குழு தலைவர் உதவி கேட்கின்றார். முன்னாள் ரா-ஏஜென்ட் பயங்கரவாதிகளுக்கு எதிராக தனது பணியை தொடங்கி அதன் விளைவாக பயங்கரவாத அமைப்பின் தலைவரை அரசு விடுவிக்க சம்மதிக்கிறது.
இந்த நிலையில் முன்னால் உளவு அதிகாரி புத்திசாலிதனமாக செய்லபட்டு சிறை பிடிக்கப்பட்டவர்களை மீட்டு தீவிரவாதிகளை கொன்றுவிடுகின்றார். இதுதான் இப்படத்தின் கதை என அத்திரையரங்கு கூறியுள்ளது. இப்படத்தில் வெளியான ட்ரைலரில் உள்ள காட்சிகளை வைத்து இந்த கதையை எழுதி இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் படத்தின் கதை லீக்காகிவிட்டதே என ரசிகர்கள் கவலைப்பட தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.