காஷ்மீர் காட்சியை பீஸ்ட் படத்துக்காக படக்குழுவினர் ஜார்ஜியாவில் செட்டிங்ஸ் மூலம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்துள்ளார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பை இம்மாத இறுதியில் ஜார்ஜியா சென்று படமாக்க உள்ளனர். படத்தில் விஜய் ராணுவ வீரராக நடிக்கிறார் எனவும், தீவிரவாதிகளிடம் சிக்கும் மக்களை மீட்பது தான் பீஸ்ட் படத்தின் கதை எனவும், கூறப்படுகிறது.
இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் எடுக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அங்கு பாதுகாப்பு காரணங்களால் எடுப்பதில் சிக்கல் என்பதை அறிந்து, காஷ்மீர் மற்றும் இந்தியா பாகிஸ்தான் எல்லையை செட்டிங்ஸ் மூலம் ஜார்ஜியாவில் எடுக்க உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.