Categories
சினிமா தமிழ் சினிமா

பீஸ்ட் டிக்கெட் விலை அதிரடி உயர்வு…. திடீர் அறிவிப்பு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பீஸ்ட். இந்த படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் பாண்டிச்சேரி திரையரங்குகளில் திரைப்பட கட்டணம் 100 ரூபாய் வரை உயர்ந்து கொண்டிருப்பதாக போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரை வருகிற 13ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு மட்டும் புதுச்சேரி அரசு உத்தரவுப்படி காட்சிகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுகிறது.

அதன்படி மூன்றாம் வகுப்பு கட்டணம் 50 ரூபாயிலிருந்து 150 ரூபாயாகவும், இரண்டாம் வகுப்பு கட்டணம் 25 ரூபாயிலிருந்து 175 ரூபாயாகவும், முதல் வகுப்பு கட்டணம் 100 ரூபாயிலிருந்து 200 ரூபாயாகவும், பால்கனி கட்டணம் 150 ரூபாயிலிருந்து 250 ரூபாயாகவும், பாக்ஸ் கட்டணம் 160 ரூபாயிலிருந்து 260 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் கட்டணம் நிரந்தரமாக உயர்த்தப்படவில்லை என்று புதுச்சேரி அரசு விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |