Categories
இந்திய சினிமா சற்றுமுன் சினிமா செய்திகள் தமிழ் சினிமா தமிழ் சினிமா

“பீஸ்ட்” டிரைலர் தேதி… “நம்ப ஆட்டம் இனிமே வேற மாதிரி இருக்கும்”… வெளியான அதிகாரப்பூர்வ தகவல்….!!!

பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது பீஸ்ட திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இத்திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. மேலும் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸே மாலை 6 மணிக்கு டிரைலர் வெளியாகும் என்றும், “நம்ம ஆட்டம் இனிமே வேற மாதிரி இருக்கும்” என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அத்துடன் ரத்தக்களரியான விஜய் ஆக்சிஜன் சிலிண்டர் உடன் இருக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |