பீஸ்ட் ட்ரைலரில் இடம் பெற்றுள்ள அனல் பறக்கும் வசனங்கள் யாருக்கோ பதிலடி கொடுப்பது போல் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இன்று மாலை ஆறு மணி அளவில் படத்தின் ட்ரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் 6 மணிக்கு வெளியானது. ட்ரெய்லர் வேற லெவலில் அமைந்திருக்கின்றது.
இராகவனே விஜய்க்கு இன்ட்ரோ கொடுக்கின்றார். அதன்பின் அரசியல் வசனம் பேசுவது மாஸாக அமைந்துள்ளது. அதன்பின் பயமா இருக்கா என விஜய் கேட்க.. இதுக்கப்புறம் இன்னும் பயங்கரமா இருக்கும் என கூறி மிரட்டி இருக்கின்றார். இதையடுத்து மினிஸ்டர் மிரட்டல் எல்லாம் விஜயிடம் வேலைக்காகாது என்ற டயலாக்கும் நீங்க பண்றீங்களா அரசியல் விளையாட்டில் எல்லாம் நமக்கு செட்டாகாது என்ற டயலாக் தெறிக்கவிட்டுள்ளது. இதையடுத்து மற்றொரு காட்சியில் பேசும் விஜய் நான் அரசியல்வாதி இல்லை… நானொரு சோல்ஜர் என ட்ரைலரில் மாஸ் காட்டியுள்ளார் விஜய்.
இதுபோல ட்ரெய்லரில் விஜய் பேசிய அரசியல் வசனங்கள் தனக்கு நெருக்கடி தந்தவர்களுக்கு பதில் அளிப்பது போல் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்டுகளில் தெரிவித்து வருகின்றனர். இந்தப் படம் திரையரங்கில் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் படத்திற்காக காத்திருக்கின்றனர்.