பீஸ்ட் மற்றும் கே.ஜி.எஃப் போட்டி ஆரம்பமாகி உள்ளது.
கேஜிஎஃப் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகிக் கொண்டிருக்கின்றது. பிரசாந்த் நீல் இயக்கம் இத்திரைப்படமானது ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தனர். ஆனால் கொரோனா தாக்கத்தினால் வெளியாகவில்லை. இந்தப் படத்தின் புதிய சிங்கிளின் வீடியோ வரும் மார்ச் 21ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.
இது போலவே பீஸ்ட் படத்தின் செகண்ட் சிங்கிள் 19ஆம் தேதி வெளியானது. கேஜிஎஃப் திரைப்படத்தின் ரிலீஸ் ஏப்ரல் 14ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகின்றது. இந்நிலையில் இரு திரைப்படங்களும் கடும் போட்டியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.