நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படம் வருகிற 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.பீஸ்ட் படத்தின் 3 பாடல்கள், டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. திருப்பூரில் செயல்பட்டு வரும் KNITBRAIN என்ற தனியார் நிறுவனம் தங்களது ஊழியர்கள் பீஸ்ட் திரைப்படத்தைப் பார்ப்பதற்காக ஏப்ரல் 13 ஆம் தேதி அன்று விடுமுறை அளித்துள்ளது. இதனை போல நெல்லையில் உள்ள ஒரு தனியார் நிறுவனமும், தங்களது ஊழியர்களுக்கு படத்திற்காக டிக்கெட் புக் செய்து கொடுத்து அரைநாள் விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.