நடிகர் விஜய் நடித்து இருக்கும் பீஸ்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வருகிறது. பயங்கரவாதிகள் வணிக வளாகத்திற்குள் நுழைந்து மக்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்து மிரட்டல் விடுப்பதும், அவர்களுடன் மோதி மக்களை விஜய் எப்படி மீட்கிறார் என்பதும் கதையாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை வெளிநாடுகளிலும் திரையிட அங்குள்ள தணிக்கை குழுவுக்கு அனுப்பிவைத்தனர். அப்போது குவைத் அரசானது “பீஸ்ட்’ திரைப்படத்தை திரையிடுவதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.
இந்த படத்தில் பயங்கரவாதிகள் தொடர்பாக சர்ச்சை மற்றும் வன்முறை காட்சிகள் உள்ளதாகவும், இதன் காரணமாகவே குவைத் தணிக்கை குழு தடை விதித்ததாகவும் கூறப்பட்டது. முன்பே விஷ்ணு விஷால் நடித்த எப்.ஐ.ஆர், மலையாளத்தில் வந்த குரூப் போன்ற படங்களுக்கும் குவைத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குவைத்தை அடுத்து கத்தாரிலும் “பீஸ்ட்” படத்தை திரையிட இப்போது தடை விதித்துள்ளனர். பயங்கரவாதிகள் குறித்த சர்ச்சை காட்சிகளுக்காகவே கத்தார் அரசும் தடை விதித்து உள்ளதாக கூறப்படுகிறது.