பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெறும் கிளைமாக்ஸ் பாடல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமான விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின அப்டேட்டுகள் அவ்வபோது வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றது.
இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றது.விரைவில் டீசர் வெளியாக இருந்த நிலையில் இந்த படத்தில் மூன்று பாடல்கள் இருப்பதாகவும் அதில் கடைசி கிளைமாக்ஸ் பாடல் அனைவருக்கும் சர்ப்ரைஸ் தரும்வகையில் இருக்கும் என்ற செய்தி வெளியாகி இருக்கின்றது.