விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் வெளியான ட்ரைலர், பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் வரும் 13ஆம் தேதி பீஸ்ட் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகின்றது.
இந்நிலையில் கர்நாடகாவில் பீஸ்ட் படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் விலை கேட்போரை தலைசுற்ற வைக்கிறது. அங்கு அதிகபட்சம் ரூபாய் 2 ஆயிரமும், குறைந்தபட்சம் ரூபாய் 400 என ஒரு டிக்கெட் விலை விற்கப்படுகின்றது. தமிழகத்தில் 300, 200 என்று டிக்கெட் விற்கப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் மட்டும் டிக்கெட்டின் விலை அதிகளவில் இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.