தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க அனிருத் இசை அமைத்திருந்தார். இந்நிலையில் பீஸ்ட் படத்தின் மொத்த வசூல் ரூ. 170 கோடி என்று ஐசிஐசிஐ வங்கி அறிவித்ததாக ஒரு தகவல் உலா வந்தது. இதன் காரணமாக தல மற்றும் தளபதி ரசிகர்களிடையே நேற்றிலிருந்து மோதல் போக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக ஐசிஐசிஐ வங்கி தற்போது பீஸ்ட் படத்தின் வசூல் குறித்த தகவல்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது ரூ. 170 கோடி வசூல் என்பது பீஸ்ட் படத்தையும் மற்றொரு படத்தையும் சேர்த்த வசூல் விவரம் என்றும், பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் வங்கி கூறியுள்ளது. இதன் மூலம் பீஸ்ட் படத்தின் வசூல் விவரம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.