தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் சன் பிக்சர்ஸ் தயாரித்த்தனர். இப்படத்தில் பூஜா ஹெக்டே, VTV கணேஷ் மற்றும் செல்வராகவன் ஆகியோர் நடித்தனர். இந்த திரைப்படத்தில் இருந்து வெளியான ப்ரோமோக்கள், பாடல்கள், டிரெய்லர் என அனைத்தும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று அதிக எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இந்நிலையில் ஏப்ரல் மாதம் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்று வருகின்றன. மேலும் இப்படத்தில் விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் பீஸ்ட் படத்தை பார்த்துவிட்டு விஜயிடம்கூறியது, இப்படம் நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கின்றது. இருப்பினும் அதை தாண்டி வேறு ஏதும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை என்று கூறினார். அதற்கு விஜய் படம் கலவையான விமர்சங்களை தான் பெற்று வருகின்றது. இன்னும் சில நாட்கள் கழித்து தான் உண்மை நிலவரம் என்ன என்பது தெரியும் என்று கூறியுள்ளார்.