மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் பீஸ்ட் படத்தில் நடித்தார். கோலிவுட் வட்டாரம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பீட்டுபடம் கடந்த வாரம் புதன்கிழமை வெளியானது. இந்நிலையில் படத்தை பார்க்க ரசிகர்கள் பலவிதமான கமெண்ட்களை சோசியல் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றார்கள். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார்.
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார். இந்த நிலையில் கடந்த வாரம் புதன்கிழமை வெளியானது படத்தை பார்த்த ரசிகர்கள் இணையதளத்தில் பலவிதமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நெல்சன் திரைக்கதை அமைப்பில் சொதப்பி விட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் இவரின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் பீஸ்ட் படத்தை பற்றி கூறியுள்ளது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. படத்தில் எல்லாரும் இருக்காங்க ஆனா திரைக்கதைதான் இல்லை. விஜய் மட்டும் நம்பி படம் எடுத்தது போல உள்ளது எனக் கூறியுள்ளார். இளம் இயக்குனர்கள் பெரிய நடிகர்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தும் சொதப்பி விடுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் இளம் இயக்குனர்களுக்கு முதல் படம் இல்லாததால் அவர்களுக்கு முன்னணி நடிகர்களை இயக்கும் வாய்ப்பு பெற்று விடுகின்றனர். இதனால் அவர்கள் என்ன மாதிரியான படத்தை இயக்கிய அது சம்பந்தப்பட்ட அந்த நடிகருக்காகவே நன்றாக ஓடி கோடிக்கணக்கில் வசூல் செய்து விடும் என தெரிவித்துள்ளார். பீஸ்ட் படம் விஜய்க்காக ஓடியதாக அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளதாக இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.