Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

“பீஸ்ட் படத்திற்கு மீம் போட்டு விமர்சித்த ப்ளூ சட்டை”… கலாய்த்து தள்ளும் விஜய் ரசிகாஸ்…!!!

பீஸ்ட் திரைப்படத்திற்கு மீம் போட்டு விமர்சித்துள்ள ப்ளூ சட்டை மாறன்.

நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் பீஸ்ட் திரைப்படம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் ட்ரெய்லரும் பாடல்களும் அமைந்தது. இந்நிலையில் நேற்று பீஸ்ட் திரைப்படமானது உலக முழுவதும் ரிலீஸானது. பீஸ்ட் படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடினாலும் பொதுவான ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

திரைக்கதை சுவாரஸ்யமாக இல்லை எனவும் காமெடி காட்சிகள் சலிப்படைய வைப்பதாகவும் படத்தில் வில்லன்கள் நன்றாக இல்லை எனவும் பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் மீம் ஒன்று போட்டு இருக்கின்றார். அவர் “ஷாப்பிங் மால் செல்பவர்கள் கொண்டாடும் திரைப்படம் பீஸ்ட் என போட்டு வடிவேல் புகைப்படத்தை போட்டு இது என்னடா புது உருட்டா இருக்கு” என விமர்சித்துள்ளார். வலிமை படத்திற்கு கடுமையான விமர்சனங்களை வைத்து அஜித் ரசிகர்களிடையே பல மரணகலாய் களை வாங்கிய ப்ளூ சட்டை தற்போது விஜய் ரசிகர்களிடம் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |