பீஸ்ட் திரைப்படத்திலிருந்து வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இத்திரைப்படத்தின் வொர்க்கிங் ஸ்டில்ஸ் இணையத்தில் பரவி வருகின்ற நிலையில் இதை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதா?இல்லை லீக்கானதா? என தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.
சிலர் இதை ஷேர் செய்து வருவதால் ரசிகர்கள் இது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. அதனால் இதை ஷேர் செய்யாதீர்கள் என கோரிக்கை செய்து வருகின்றனர். இதற்கு முன் பீஸ்ட் படத்திலிருந்து புகைப்படங்கள் லீக்கானது குறிப்பிடத்தக்கது.