பீஸ்ட் படத்தில் இந்திக்கு எதிராக விஜய் பேசியுள்ள வசனம் வைரலாகி வருகின்றது.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் நேற்று பீஸ்ட் திரைப்படம் ரிலீஸாகி உள்ளது. இதற்கு முன்னதாக படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. இந்த நிலையில் நேற்று படம் வெளியாகியதால் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் சொல்லிச்சொல்லி விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். வணிக வளாகத்தில் உள்ள மக்களை தீவிரவாதிகள் தங்களின் பிடியில் வைத்திருப்பார்கள். மக்களை மீட்க விஜய் போராடி வருவார். தீவிரவாதிகளுடன் பல பேச்சுவார்த்தை நடத்துவார்.
படத்தில் விஜய் முன்னால் ரா ஏஜன்ட் என்பதால் இந்தியில் பேசி தீவிரவாதிகளுக்கு ஒவ்வொரு முறையும் புரியவைப்பார். ஆனால் ஒரு கட்டத்தில் காண்டாகி சும்மா சும்மா இந்திய தமிழ்ல டிரான்ஸ்லேட் பண்ணி புரிய வைக்க முடியாது. நீ வேணும்னா போய் தமிழ் கத்துக்கிட்டு வா என கூறுவார். விஜய் இதை பேசும்பொழுது திரையரங்கில் பலத்த கரகோஷம் எழுப்பப்பட்டது. இந்தியை இணைப்பு மொழியாக மத்திய அரசு மாற்ற முயற்சித்து வருகின்றது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுகின்றது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத், சிம்பு, வைரமுத்து உள்ளிட்டோர் தமிழுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் மூலம் விஜயும் இந்திக்கு எதிராக குரல் கொடுத்து இருக்கின்றார்.