Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

“பீஸ்ட் படத்தில் இந்தி திணிப்பு பற்றி விஜய் பேசிய வசனம்”… கருத்து தெரிவித்த அண்ணாமலை…!!!

பீஸ்ட் திரைப்படத்தில் இந்தி திணிப்பு பற்றி விஜய் பேசிய வசனம் பற்றி அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் நேற்று முன் தினம் வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. படம் எதிர்பார்த்தபடி இல்லை எனவும் கதை சொதப்பப்பட்டிருப்பதாகவும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றார்கள். ஆனால் வசூலில் எந்தவித பாதிப்பும் இல்லை என படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. பீஸ்ட் படம் பல வசூல் சாதனைகளை முறியடித்து வருவதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது.

இந்நிலையில் படத்தில் விஜய் ஹிந்தி திணிப்பு பற்றி பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இது பற்றி கேட்டபொழுது அவர் கூறியதாவது, “பொதுவாக படங்கள் என்றாலே பல விமர்சனங்கள் வரும். எனவே படத்தை படமாக தான் பார்க்க வேண்டும். பாஜகவிற்கும் சினிமா துறையைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல பந்தம் இருக்கிறது. அதேபோல் நாட்டில் இந்தி திணிப்பு இல்லை என பிரதமர் மோடியை கூறிவிட்டார் ஆகையால் இதை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம்” என அண்ணாமலை கூறியுள்ளார். அண்ணாமலை இவ்வாறு கூறியதால் பீஸ்ட் படத்திற்கு எந்த பிரச்சனையும் வராது என்பது தெரிய வந்திருக்கின்றது.

Categories

Tech |