பீஸ்ட் படம் பற்றி பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நேற்று முன்தினம் வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படம் பலவிதமான நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றது. இத்திரைப்படத்தில் விஜய் இராணுவ உளவாளியாக நடித்துள்ளார். ஒரு அசம்பாவிதம் நடந்தால் வேலையை விட்டுவிட்டு தமிழகம் வரும் விஜய் ஷாப்பிங் மாலில் இருக்கும்போது தீவிரவாதிகளால் மால் ஹைஜாக் செய்யப்படுகின்றது. அப்போது மாலில் உள்ள மக்களை விஜய் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதையாகும்.
இத்திரைப்படத்தில் உமர் பாரூக் என்பவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க படத்தில் அவர் என்ன குற்றம் செய்தார் என்பதை கூறவில்லை. படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக மட்டுமே கட்டப்பட்டிருக்கின்றது. துப்பாக்கி படத்திற்கு அடுத்ததாக பீஸ்ட் திரைப்படமும் முஸ்லிம்களுக்கு எதிராக இருப்பதாக முஸ்லிம் அமைப்புகள் கருத்து தெரிவித்து வருகின்றார்கள். இந்நிலையில் விஜயகாந்தின் மனைவியும் திமுக கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த்யிடம் பீஸ்ட் படம் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் கூறியுள்ளதாவது, “படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டுவது தவறு” என கூறி இருக்கின்றார்.