Categories
சினிமா தமிழ் சினிமா

‘பீஸ்ட்’ படத்தில் ராணுவ வீரராக நடிக்கும் விஜய்… வெளியான சூப்பர் தகவல்…!!!

பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் ராணுவ வீரராக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் நடைபெற்றது.

Thalapathy 65 second look: Vijay is in full-on 'Beast' mode | Entertainment  News,The Indian Express

ஆனால் அங்கு சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், மழை காரணமாக படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் படக்குழு சென்னை திரும்பியது. தற்போது இந்த மாத இறுதியில் மீண்டும் ஜார்ஜியா சென்று மீதமுள்ள படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் பீஸ்ட் படத்தில் விஜய் ராணுவ வீரராக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தீவிரவாதிகளிடம் சிக்கும் மக்களை மீட்பது தான் இந்த படத்தின் கதை என கூறப்படுகிறது. மேலும் காஷ்மீர் மற்றும் இந்தியா- பாகிஸ்தான் எல்லையை செட்டிங்ஸ் மூலம் ஜார்ஜியாவில் எடுக்க உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |