தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது பீஸ்ட திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இத்திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. மேலும் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட் செம மாஸாக வெளியாகியுள்ளது. பீஸ்ட் படத்தில் விஜய் நடித்துள்ள கதாபாத்திரத்தின் பெயர் வீரராகவன் என்றும், படத்தில் அவரை வீரா என்றும் அனைவரும் அழைப்பார்கள் என்று படக்குழு தெரிவித்துள்ளது. படத்தில் ரா உளவுத்துறை ஏஜெண்டாக விஜய் நடித்துள்ளார்.