நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வருகிறது. பீஸ்ட் படத்தை வெளிநாடுகளிலும் திரையிட அங்குள்ள தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், குவைத் அரசு பீஸ்ட் படத்தை திரையிட அனுமதி மறுத்துவிட்டது.
பீஸ்ட் படத்தில் பயங்கரவாதிகள் குறித்து சர்ச்சை மற்றும் வன்முறை காட்சிகள் இருப்பதாகவும், இதனாலேயே குவைத் தணிக்கை குழு தடை விதித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் குவைத்தை தொடர்ந்து கத்தாரிலும் பீஸ்ட் படத்தை திரையிட தற்போது தடை விதித்து உள்ளனர். பயங்கரவாதிகள் பற்றிய சர்ச்சை காட்சிகளுக்காகவே கத்தார் அரசும் தடை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது.