வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசாக உள்ள பீஸ்ட் திரைப்படத்தின் டீம்முக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் நடிகரான விஜய்யின் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற 13-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் மொத்த பீஸ்ட் டீம்முக்கும் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும் என்னை போன்று விஜய்யின் பெரிய ஃபேனாக இருக்கும் அட்லி உடன் தான் அமர்ந்துள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி பீஸ்ட் படத்தின் டிரைலர் meaner… leaner… stronger ராக தெரிகிறது என்றும் அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இவ்வாறு இருக்க தற்போது நடிகர் ஷாருக்கானை வைத்து படத்தை இயக்கி வரும் அட்லி பீஸ்ட் குறித்த அவரது பதிவை பார்த்துள்ளார். அதன்பின்பு இயக்குனர் அட்லி உங்களது அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி சார் என பதிவிட்டுள்ளார்.