Categories
சினிமா தமிழ் சினிமா

‘பீஸ்ட்’ படப்பிடிப்பு எப்போது நிறைவடையும்?… வெளியான புதிய தகவல்…!!!

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பை நவம்பர் மாத இறுதிக்குள் முழுவதுமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், ஷைன் டாம் ஷாக்கோ, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Red Hot update: Team 'Beast' to fly North for next schedule? - Tamil News -  IndiaGlitz.com

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நவம்பர் மாத இறுதிக்குள் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த வருடம் பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |