Categories
சினிமா தமிழ் சினிமா

பீஸ்ட் படம் குறித்து நடிகர் ஷாருக்கான் போட்ட ட்வீட்… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!!!!

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார். இந்நிலையில் விஜய்யின்  பீஸ்ட் பட டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய்.

இந்த நிலையில் கடந்த மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான “ஹலமித்தி ஹபிபோ” பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து வருகிறது. அதனை தொடர்ந்து விஜயின் குரலில் வெளியான ஜாலியோ ஜிம்கானா பாடலும் யூடியூபில் பல கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை வெளியான பீஸ்ட் பட ட்ரெய்லரை 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்கள் யூடியூபில் பார்த்திருக்கின்றனர்.

இந்த டிரைலரை இயக்குனர் அட்லி உடன் இணைந்து பார்த்து மகிழ்ந்ததாக நடிகர் ஷாருக்கான் போட்டுள்ள ட்வீட் இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. மேலும் அவர் என்னை விட தீவிரமான விஜய் ரசிகர் என அட்லி பற்றிய ஷாருக்கான் குறிப்பிட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். தற்போது அட்லி இயக்கத்தில் லயன் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஷாருக்கான். மேலும் இந்த படம் கடந்த சில வாரங்களாக இந்த வதந்திகளுக்கு  ஷாருக்கானின் ட்விட்டால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

 

 

Categories

Tech |