மோட்டார் சைக்கிள் இரும்பு தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பீஸ்ட் படம் பார்க்க சென்ற வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆசாரிபள்ளம் பகுதியில் ஜெனிஸ் ரோஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ராஜன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருநெல்வேலியில் இருக்கும் ஒரு தியேட்டருக்கு பீஸ்ட் படம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழநத்தம் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் தாறுமாறாக ஓடி இரும்பு தடுப்பின் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜெனிஸ் ரோஜன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.