தனியார் நிறுவனம் ஒன்று விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தை பார்க்க அரைநாள் விடுமுறை தந்துள்ளது.
தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகரான விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்த இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இத் திரைப்படமானது வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி ரிலீசாக உள்ளது.
அதனால் படத்தை முதல் நாளே பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றார்கள். இதனால் கல்லூரி செல்பவர்களும் அலுவலகங்களுக்கு செல்பவர்களும் யோசித்து யோசித்து டிக்கெட்டுகளை வாங்கி வைத்துள்ளனர். இத்திரைப்படம் ரிலீஸ் ஆகும் நாள் அன்று பொய் சொல்லி விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளனர்.
சிலரோ உண்மையை சொல்லியே விடுப்பு கேட்டிருக்கிறார்கள். இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியர்கள் பீஸ்ட் திரைப்படத்தை பார்த்தாக வேண்டும் என டிக்கெட் எடுத்துள்ள நிலையில் அவர்களுக்கு படம் பார்க்க அந்நிறுவனமே அரைநாள் விடுமுறை அளித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது.