பீஸ்ட் திரைப்படத்தின் வசூல் பற்றிய தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படமானது நேற்று வெளியாகியுள்ள நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இத்திரைப்படமானது விஜய் ரசிகர்களுக்கு மட்டுமே பிடித்ததாக அமைந்திருக்கின்றது. படத்தின் பின்னடைவுக்கு காரணம் கதையில் சுவாரசியம் இல்லாத தே என கூறிகின்றனர் . ஆனால் படத்தில் காமெடி காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் நன்றாக அமைந்து இருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். மேலும் நெல்சன் விஜயை படத்தில் ஸ்டைலிஸாக காண்பித்து இருப்பதாக கூறுகிறார்கள். இத் திரைப்படமானது நெல்சனின் டார்க் காமெடி இல்லாமலும் விஜய்யின் கமர்சியல் படமாக இல்லாமலும் இருப்பதால் தான் படம் பின்னடைவை சந்தித்து இருப்பதாக கூறுகிறார்கள்.
இருப்பினும் படத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு, அமோகமாக நடந்தததால் வசூல் லாபகரமாக ஈட்டித் தரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி செம்பியன் திரைப்படம் பற்றி இணையத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, பீஸ்ட் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இத்திரைப்படமானது அனைத்து ரெக்கார்டுகளையும் அடித்து நொறுக்கி உள்ளதாகவும் அனைவருக்கும் நன்றிகள் என பதிவிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். காரணம் படத்திற்கு விமர்சனங்கள் பல வந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றால் போதும் என்ற நிலையில் ரசிகர்கள் இருக்கின்றார்கள் குறிப்பிடத்தக்கது.