பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் கவலையில் இருக்கின்றார் பூஜா ஹெக்டே.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானர் பூஜா ஹெக்டே. பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகிய இத்திரைப்படம் தோல்வியையே தழுவியது. இதனால் தமிழ் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கில் நடிக்க சென்ற இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பத்து வருடங்களாக இவர் தெலுங்கு படங்களில் நடித்து வெற்றிப் படங்களாக்கி வருகின்றார். இதன் மூலம் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார்.
இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து பீஸ்ட திரைப்படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் பூஜா. ஆனால் இத்திரைப்படமும் முகமூடி படத்தைப் போலவே எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் கவலையில் இருக்கும் பூஜா இனி தமிழ் நமக்கு செட்டாகாது. தெலுங்கு படங்களில் நடிக்கலாம் என முடிவெடுத்து இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.