Categories
சினிமா தமிழ் சினிமா

‘பீஸ்ட்’ விஜய்யுடன் நடிப்பது குறித்து பேசிய பூஜா ஹெக்டே… செம வைரலாகும் வீடியோ…!!!

சென்னையில் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு பூஜா ஹெக்டே மும்பை திரும்பியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரம்மாண்ட மால் ஒன்றில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக பீஸ்ட் படக்குழு டெல்லி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் பீஸ்ட் படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகை பூஜா ஹெக்டே மும்பை திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமான நிலையத்தில் பூஜா ஹெக்டே செய்தியாளர்களிடம் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பூஜா ஹெக்டே ‘தளபதி விஜய்யுடன் பீஸ்ட் படப்பிடிப்பில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி’ என தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |