ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் சென்னை பல்கலைக்கழகம் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழக இலவச கல்வித் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் இணைப்புக் கல்லூரிகளில் சேர பிளஸ் 2 முடிவுகள் வெளியான தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் மாணவர்கள் https://www.unom.ac.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.இதில் விருப்பமுள்ள மாணவர்கள் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் இதில் இணைந்து பயன்பெற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Categories